தன் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்த போலீஸ் கான்ஸ்டபிளை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட குஜராத் ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் மற்றும் அவரது குடும்பத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க குஜராத் அரசை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. சிறையில் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என அவரது மனைவி ஸ்வேதா பட் அச்சம் தெரிவித்ததையடுத்து, உள்துறை அமைச்சகம் இந்த கோரிக்கையை தெரிவித்துள்ளது.
டில்லி மெட்ரோ ரயிலில் ராகுல் பயணம்
டில்லியின் புறநகர்ப்பகுதியான ரோகிணியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொள்ள டில்லி மெட்ரோ ரயிலில் ராகுல் பயணம் செய்தார். தனது 12, துக்ளக் ரோடு அலுவலகத்திற்கு அருகிலுள்ள ரேஸ் கோர்ஸ் ரோடு மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து, மேற்கு ரோகிணி மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்ற அவர், அங்கிருந்து டாக்ஸி மூலம் பேரணி நடந்த ரோகிணி ஜப்பானிஷ் பூங்காவிற்கு சென்றுள்ளார். டாக்சியில் செல்ல ராகுல் தனக்கு ரூ. 200 அளித்ததாக அவருக்கு டாக்ஸி ஓட்டிய டிரைவர் ஸ்ரவன் பெருமையுடன் தெரிவித்தார்
நிதீஷ் குமாருக்கு பஸ்வான் கண்டனம்
பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு, லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்வானி ரதயாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, பீகாரில் ரதயாத்திரையை துவக்கி வைப்பதாக சமீபத்தில் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார். இது மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்றும், இதன்மூலம் ஐக்கிய ஜனதா தள கட்சி தனது கொள்கையிலிருந்து விலகி விட்டதாக பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் குறுக்கீடு : அலுவாலியா மறுப்பு
வறுமைக்கோடு வரம்பை மாற்றியமைப்பதற்கான விவாதத்தில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் கலந்து கொள்ளவில்லை, இதுகுறித்து, அவர் என்னுடன் பேசவில்லை என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் ஒருநாள் சம்பளம் ரூ. 32 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 26 க்கு மேல் வாங்குவோர் வறுமைக் கோட்டு வரம்பிற்கு கீழ் வரமாட்டார்கள். இதன்மூலம், அரசின் நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைக்காது என்ற பரபரப்பு தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த தகவல் வெளியான நிமிடத்தில் துவங்கிய, பரபரப்பு இன்று வரை அடங்கவில்லை. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அலுவாலியா கூறியதாவது, இது மத்திய திட்டக்குழு கமிஷனின் தகவல் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். ராகுல் இதுகுறித்து தன்னுடன் விவாதிக்கவில்லை என்று அலுவாலியா கூறியிருப்பது அரசியல் ஆர்வலர்களின் புருவங்களை சற்றே உயர்த்தியுள்ளது.
ம.தி.மு.க., வேட்பாளர் மனு வாபஸ்
சென்னை: தாம்பரம் நகராட்சி தலைவருக்கு, ம.தி.மு.க., சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர், மனுவை, "வாபஸ்' பெற்றார். தாம்பரம் நகராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., கரிகாலன், தி.மு.க., ஆதிமாறன், காங்கிரஸ், மணி உள்ளிட்ட 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ம.தி.மு.க., சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்த குபேரா ஜெய்சங்கர், நேற்று மனுவை, "வாபஸ்' பெற்றார். தாம்பரம் நகராட்சியில், 12 வார்டுகளில் ம.தி.மு.க., போட்டியிடுகிறது. இதில், வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தாம்பரத்தில் கடந்த சனிக்கிழமை பிரசாரம் செய்தார். இந்நிலையில், நகராட்சித் தலைவருக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த குபேரா ஜெய்சங்கர், வாபஸ் வாங்கியிருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழலை ஒழிக்க அரசியலால் மட்டுமே முடியும் : ராகுல்
நாட்டில் நிலவி வரும் ஊழலை எவ்வித உண்ணாவிரதப் போராட்டத்தாலோ, மற்ற வகையான போராட்டங்களினாலோ ஒழிக்க முடியாது என்றும், ஊழலை, நல்ல அரசியல் செயல்பாடுகளினால் மட்டுமே ஒழிக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார். தலைநகர் டில்லியில், இளைஞர் காங்கிரசார் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய ராகுல் கூறியதாவது, ஊழல், தற்போது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இது இளைய தலைமுறையினரின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக உள்ளது. ஊழலை ஒழிக்க நல்ல அரசியல் செயல்பாடுகளினால் மட்டுமே முடியும். இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் பங்குபெற வேண்டும் என்று அவர் கூறினார். வெறும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதன் மூலமாக, ஊழலை ஒழித்துவிட முடியும் என்று சிலர் பகல் கனவு கண்டுவருவதாக, மறைமுகமாக காந்தியவாதி அன்னா ஹசாரேவை அவர் தாக்கிப் பேசினார்.
நிதீஷ் குமாருக்கு பஸ்வான் கண்டனம்
பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு, லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்வானி ரதயாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, பீகாரில் ரதயாத்திரையை துவக்கி வைப்பதாக சமீபத்தில் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார். இது மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்றும், இதன்மூலம் ஐக்கிய ஜனதா தள கட்சி தனது கொள்கையிலிருந்து விலகி விட்டதாக பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் குறுக்கீடு : அலுவாலியா மறுப்பு
: வறுமைக்கோடு வரம்பை மாற்றியமைப்பதற்கான விவாதத்தில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் கலந்து கொள்ளவில்லை, இதுகுறித்து, அவர் என்னுடன் பேசவில்லை என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் ஒருநாள் சம்பளம் ரூ. 32 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 26 க்கு மேல் வாங்குவோர் வறுமைக் கோட்டு வரம்பிற்கு கீழ் வரமாட்டார்கள். இதன்மூலம், அரசின் நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைக்காது என்ற பரபரப்பு தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த தகவல் வெளியான நிமிடத்தில் துவங்கிய, பரபரப்பு இன்று வரை அடங்கவில்லை. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அலுவாலியா கூறியதாவது, இது மத்திய திட்டக்குழு கமிஷனின் தகவல் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். ராகுல் இதுகுறித்து தன்னுடன் விவாதிக்கவில்லை என்று அலுவாலியா கூறியிருப்பது அரசியல் ஆர்வலர்களின் புருவங்களை சற்றே உயர்த்தியுள்ளது
ஜன்லோக்பால் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் “ காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம்”- ஹசாரே
ராலேகான் சித்தி: ஊழலை ஒழிக்க பயன்படும் ஜன்லோக்பால் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். இன்று இவர் நிருபர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் ஜன்லோக்பால் நிறைவேறும்வரை எனது போராட்டம் தொடரும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனது முக்கிய நோக்கம். வரும் குளிர்கால பார்லி., கூட்டத்தொடரில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் எனது உண்ணாவிரத போராட்டம் மீண்டும் தொடரும்.
ஜன்லோக்பால் மசோதாவுக்கு பா.ஜ., ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது. நாட்டில் அனைத்து தரப்பிலும் ஆதரவு கிடைக்கிறது காங்கிரசை தவிர. இதனால் வரும் காலத்தில் மசோதா நிறைவேற்ற தவறும்பட்சத்தில் தேர்தல் நடவக்கவுள்ள மாநிலங்களில் காங்., பிரதிநிதிகளை மக்கள் தேர்வு செய்யக்கூடாது என கேட்டுக்கொள்வேன். இந்த நாட்டுக்காக யார் உழைக்க நினைக்கின்றனரோ அவர்களுக்கு ஓட்டளியுங்கள். நான் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானவன் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் லோக்அயுக்தா நிறைவேற்றபட வேண்டும்.
தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலம் மற்றும் உத்திரபிரதேசத்தில் பலகட்ட பிரசார பேரணி நடத்தவுள்ளேன். அனைத்து அரசியல் கட்சியினருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். உ.பி.,யில் தேர்தலுக்கு முன்னதாக 3நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். நாடு முழுவதும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருக்கின்றேன். இதற்கென தசரா திருவிழாவிற்கு பின்னர் சுற்றுப்பயணம் செய்யவிருக்கின்றேன். தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் சுற்றுப்பயணம் நிச்சயம் இருக்கும். பிரதமர் நேர்மையான மனிதர் ஆனால் இவர் ரிமோட் கன்ட்ரோலுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார். இவ்வாறு ஹசாரே தெரிவித்தார்.
ஹசாரே கருத்துக்கு காங்., எதிர்ப்பு : ஹசாரேயின் கருத்துக்கு சட்ட அமைச்சர், மற்றும் காங்., தலைவர்களில் ஒருவரான ரஷீத் ஆல்வி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சல்மான் குர்ஷீத் கூறுகையில்: மற்ற மசோதக்களை விட பலமான மசோதாவாக கொண்டு வரவே காங்., விரும்புகிறது. எல்லோரும் தங்களுடைய கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது. மக்களுக்காக காங்கிரஸ் உழைத்து வருகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும், யாருடைய தாக்குதலை பற்றியும் கவலைப்பபடாது என்றாõர். ஆல்வி கூறுøயில் ஹசாரேயின் கருத்து கண்டனத்திற்குரியது என்றார். பா.ஜ. ஆர்.எஸ்.எஸ்., என தற்போது அந்த வரிசையில் ஹசாரே இடம் பிடித்திருக்கிறார். இது கட்சியை எந்த விதத்திலும் பாதிக்ககாது என்றார்.

ஜன்லோக்பால் விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ஹசாரே சுற்றுப்பயணம்
ராலேகான் சித்தி : ஊழலை ஒழிக்க பயன்படும் ஜன்லோக்பால் குறித்து விழிப்புணவர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்விருப்பதாக காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். இன்று இவர் நிருபர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். மேலும் கூறுகையில் ஜன்லோக்பால் நிறைவேறும்வரை எனது போராட்டம் தொடரும் என்றார். மீண்டும் உண்ணாவிரதம் இருக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். இம்மசோதா நிறைவேற்ற தவறும் பட்சத்தில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என பிரசாரம் செய்வேன் என்றார்.
போராட்டம் தொடரும்: பிடிபி., அறிவிப்பு
ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டுக்கட்சித்தொண்டர் போலீஸ் காவலில் இறந்த சம்பவத்தில், ஓமர் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும் என மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. ஆளும் தேசிய மாநாட்டுக்கட்சித்தொண்டர் சையத் முகமது யூசுப், மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 29ம் தேதி போலீஸ் காவலில் இறந்தார். இச்சம்பவம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும், இதுகுறித்து சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இச்சம்பவத்தில் ஓமர் பதவி விலகும் வரை ஓயப்போவதில்லை என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் விதிமீறல்: வைகோ மீது வழக்கு
மதுரை: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உள்ளாட்சித்தேர்தலில், மதுரை மாநகராட்சிக்கு ம.தி.மு.க., சார்பில் மேயர் வேட்பாளராக பாஸ்கர சேதுபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று மதுரையின் பல்வேறு பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகளவிலான வாகனங்கள் வந்ததாக, வைகோ மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)