https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3SXjmbuzlAJB9dHgXg9l-vtIuumUWVf0Y5uygecLZEE6MfTkaLvtMd-8uldbA215vOx1iQGn55mDD7caHbktAsRUmn2ergSREC7B4qJx3o1fH18q9Qm2ggtjodd9aXgaRVETkc_XK4fFh/s1600/tamilmanam.jpg

ராகுல் குறுக்கீடு : அலுவாலியா மறுப்பு

வறுமைக்கோடு வரம்பை மாற்றியமைப்பதற்கான விவாதத்தில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் கலந்து கொள்ளவில்லை, இதுகுறித்து, அவர் என்னுடன் பேசவில்லை என்று மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களில் ஒருநாள் சம்பளம் ரூ. 32 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 26 க்கு மேல் வாங்குவோர் வறுமைக் கோட்டு வரம்பிற்கு கீழ் வரமாட்டார்கள். இதன்மூலம், அரசின் நலத்திட்ட உதவிகள் அவர்களுக்கு கிடைக்காது என்ற பரபரப்பு தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த தகவல் வெளியான நிமிடத்தில் துவங்கிய, பரபரப்பு இன்று வரை அடங்கவில்லை. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அலுவாலியா கூறியதாவது, இது மத்திய திட்டக்குழு கமிஷனின் தகவல் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். ராகுல் இதுகுறித்து தன்னுடன் விவாதிக்கவில்லை என்று அலுவாலியா கூறியிருப்பது அரசியல் ஆர்வலர்களின் புருவங்களை சற்றே உயர்த்தியுள்ளது.