சென்னை: தாம்பரம் நகராட்சி தலைவருக்கு, ம.தி.மு.க., சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர், மனுவை, "வாபஸ்' பெற்றார். தாம்பரம் நகராட்சி தலைவர் பதவிக்கு, அ.தி.மு.க., கரிகாலன், தி.மு.க., ஆதிமாறன், காங்கிரஸ், மணி உள்ளிட்ட 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ம.தி.மு.க., சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்த குபேரா ஜெய்சங்கர், நேற்று மனுவை, "வாபஸ்' பெற்றார். தாம்பரம் நகராட்சியில், 12 வார்டுகளில் ம.தி.மு.க., போட்டியிடுகிறது. இதில், வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தாம்பரத்தில் கடந்த சனிக்கிழமை பிரசாரம் செய்தார். இந்நிலையில், நகராட்சித் தலைவருக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த குபேரா ஜெய்சங்கர், வாபஸ் வாங்கியிருப்பது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.