பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு, லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்வானி ரதயாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, பீகாரில் ரதயாத்திரையை துவக்கி வைப்பதாக சமீபத்தில் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார். இது மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானது என்றும், இதன்மூலம் ஐக்கிய ஜனதா தள கட்சி தனது கொள்கையிலிருந்து விலகி விட்டதாக பஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.